/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச 'டிரோன் ஸ்பிரேயர்'
/
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச 'டிரோன் ஸ்பிரேயர்'
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச 'டிரோன் ஸ்பிரேயர்'
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச 'டிரோன் ஸ்பிரேயர்'
ADDED : ஜூலை 28, 2024 01:04 AM

கோவை;மத்திய அரசின் 'நமோ டிரோன் தீதி' திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு, வேளாண் பயன்பாட்டுக்கான 'டிரோன் ஸ்பிரேயர்' இலவசமாக டிரோன் வழங்கப்பட்டது.
'நமோ டிரோன் தீதி' திட்டத்தின் கீழ், நாடு முழுதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 டிரோன் ஸ்பிரேயர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக, 1095 மகளிர் குழுக்களுக்கு டிரோன் ஸ்பிரேயர்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 44 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராமபட்டினம் ஊராட்சி, பத்ரகாளியம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த, பயனாளி வசந்தாமணிக்கு 'டிரோன் ஸ்பிரேயர்' இலவசமாக வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த டிரோன் ஸ்பிரேயர் வழங்கும் நிகழ்ச்சியில், டிரோனை இயக்குவது தொடர்பாக, பயனாளியிடம் கலெக்டர் கிராந்திகுமார் கேட்டறிந்தார்.
இதுகுறித்து, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா கூறியதாவது:
இந்த டிரோன் ஸ்பிரேயரைப் பயன்படுத்தி குறைவான நேரத்தில், குறைந்த செலவில் சீராக பூச்சிக் கொல்லி, திரவ உரம், மீன் அமிலம் போன்றவற்றைத் தெளிக்க முடியும்.
வாடகை அடிப்படையில் அவர் வருவாய் ஈட்ட முடியும். மகளிர் மேம்பாட்டுக்காக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
டிரோனை இயக்குவதற்கான பயிற்சி, உரிமம், டிரோன் என இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம்.
கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக, ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட வள பயிற்றுனர் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.