ADDED : ஆக 10, 2026 06:22 PM
அன்னூர்: செம்மாணி செட்டிபாளையத்தில், நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பொது சுகாதாரத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் கூட்டமைப்பு சார்பில், செம்மாணி செட்டிபாளையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளை (12ம் தேதி) காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
முகாமில், கண் புரை, கண் நீர் அழுத்த நோய், விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட பார்வை குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கண் பாதிப்பு உள்ளோர் முகாமிற்கு வரும் போது, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல் கொண்டுவர வேண்டும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
