sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை

/

தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை

தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை

தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை


ADDED : மார் 08, 2025 11:32 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: உலக அளவில் குளூக்கோமா விழிப்புணர்வு வாரம், நாளை முதல் 15ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதனை மையமாக கொண்டு, கோவை தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில், குளூக்கோமா பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி கூறியதாவது:

குளூக்கோமா பாதிப்பு, பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்படலாம். ஆனால், 40 வயதுக்கு மேல் இதன் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் கண்பார்வையை காப்பாற்றி விடலாம்.

இப்பாதிப்பால் பார்வை இழந்தவர்கள், அதனை மீட்பது என்பது இயலாது. இந்தியாவில் உள்ள பார்வையற்றவர்களில், 13 சதவீதம் பேர் இதன் காரணமாக பார்வையிழந்தவர்கள்.

உறவுகளில் யாருக்கேனும் இந்நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு அதிகம் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை, தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு, வர வாய்ப்புண்டு. குழந்தைகள் வெளிச்சம் பார்க்க முடியாமல் தவித்தாலோ, தண்ணீர் வெளியேறினாலோ உடனடியாக கவனிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகையும் அளிக்கவுள்ளோம். மேலும் விபரங்களுக்கு, 94422 17796, 0422 424200 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us