ADDED : மார் 05, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; வடக்கலூர், சமுதாய நலக்கூடத்தில், வருகிற 8ம் தேதி, காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.
துாரப்பார்வை, கண் புரை, கண்ணில் நீர் அழுத்தம், நீர்ப்பை அடைப்பு, உள்ளிட்ட அனைத்து விதமான கண் நோய்களுக்கும், இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், முகாமிற்கு வரும்போது ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். அறுவை சிகிச்சை, தங்குமிடம், உணவு, மருத்துவம், பஸ் வசதி என அனைத்தும் இலவசம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வடக்கலூர் நேரு இளைஞர் நற்பணி மன்றம், சிறுமுகை லயன்ஸ் கிளப், மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரண குழு இணைந்து முகாமை நடத்துகின்றன.