ADDED : பிப் 24, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் கோதண்டபாணி பஜனை சங்கம், அட்சயம் அறக்கட்டளை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், மகளிர் நலம், தோல், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கண் கண்புரை அகற்றுதல், குடல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளைச் சார்ந்த டாக்டர்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துஆலோசனை வழங்கினர்.
முகாமில், 85 பேருக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் வயிறு சம்பந்தமான ஐந்து பேர், எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு பேர் என, ஒன்பது பேர் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை கோதண்டபாணி பஜனை சங்கத்தினர், அட்சயம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

