ADDED : ஜூலை 25, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஸ்ரீ கோயமுத்தூர் ஜெயின் மகா சங், பீப்பிள் பார் பீப்பிள் பவுண்டேசன், ஸ்ரீ கே.டி.ஒ.,ஜெயின் க்யாதி மஹாஜன் ஆகியோர் இணைந்து இலவச பல்துறை மருத்துவ முகாமை நடத்துகின்றன.
ஆர்.எஸ்.,புரம், ராபர்ட்சன் ரோடு, ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 1:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
முகாமில் இருதய நோய், தோல், கண், நுரையீரல், பல் மருத்துவம், பொது மருத்துவம், நரம்பியல், இரைப்பை குடல், நீரிழிவு நோய், பிசியோதெரபி, முடக்குவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். பரிசோதனைக்கு பிறகு இலவச மருந்துகள் கிடைக்கும்
விபரங்களுக்கு, 94430 39425, 98422 35300 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.