sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்று மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு

/

மூன்று மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு

மூன்று மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு

மூன்று மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு


ADDED : ஏப் 02, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நீட் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, கடந்த 22ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. 2023--2024ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை சி.சி.எம்.ஏ.,பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ்., ஆண்கள் பள்ளி என, மூன்று பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் மே 2ம் தேதி வரை, பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''கோவை மாநகரில் 102 பேர்,, பொள்ளாச்சியில் 56 பேர், மேட்டுப்பாளையத்தில் 50 பேர் என, மொத்தம் 208 மாணவ, மாணவியருக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வழங்குவதற்காக தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us