/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச யாத்திரை
/
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச யாத்திரை
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச யாத்திரை
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் இலவச யாத்திரை
ADDED : ஜூலை 13, 2024 12:57 AM
கோவை;இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு 1,000 மூத்த குடிமக்கள் இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கோவை மண்டலத்தில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் ஆகிய ஆறு கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்.
கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வரும் 19, 26, ஆக., 2 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஆன்மிக பயணம் தொடங்குகிறது.
போதிய உடல்திறன் உள்ள 60 - 70 வயதுக்கு உட்பட்ட இந்து பக்தர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மேற்கண்ட 6 கோவில் அலுவலகங்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது துறையின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்று, ஆதார் உள்ளிட்ட சான்றுகள் தேவை.
கூடுதல் விவரங்களை கோவில் அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம் என, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

