தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 25, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம் கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வீட்டு முறை மசாலா, சிறுதானிய ஸ்னாக்ஸ், வடகம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு, 10 நாட்கள் நடக்க உள்ளது.

இன்று (25ம் தேதி) பயிற்சிக்கான நேர்காணல் நடக்கிறது. எழுத படிக்க தெரிந்த, 18 வயதுக்கு மேல் 45 வயது வரையுள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.

இதில், சேர விரும்புவோர், 'கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர் -641652' என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், https://forms.gle/jGgxNjnqk3eqxDNr5 என்ற 'லிங்க்' மூலமாக, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 94890 - 43923, 99525 - 18441, 86105 - 33436 எண்களில் அணுகலாம் என, இதன் இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us