sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் பஸ்கள்  இளம் சிகப்பிலிருந்து வெளிர் ஊதாவுக்கு மாறியது

/

கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் பஸ்கள்  இளம் சிகப்பிலிருந்து வெளிர் ஊதாவுக்கு மாறியது

கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் பஸ்கள்  இளம் சிகப்பிலிருந்து வெளிர் ஊதாவுக்கு மாறியது

கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் பஸ்கள்  இளம் சிகப்பிலிருந்து வெளிர் ஊதாவுக்கு மாறியது


ADDED : மே 16, 2024 05:51 AM

Google News

ADDED : மே 16, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : ஓட்டை உடைசல்களாக இயங்கி வந்த மகளிர் பயணிக்கும் அரசு பஸ்களுக்கு பதிலாக புதியதாக வெளிர் ஊதா நிறத்திலான பஸ்கள் விடப்பட்டுள்ளன. அதில் மகளிர் பயணிக்க இலவசம் என்று எழுதப்பட்டுள்ளது.

கோவையில், 602 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், 180 பஸ்கள் சிகப்பு நிற பஸ்கள். இதில் இரட்டிப்புக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மற்ற பஸ்களின் முகப்பு பகுதி இளம் சிகப்பு நிறத்தில் அடையாள படுத்தப்பட்டிருக்கும்.இதைபார்த்தவுடன் மகளிருக்கு இலவசமாக இயக்கப்படும் பஸ்கள் என்பது தெரியவரும்.

இச்சூழலில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பஸ்கள் ஓட்டை உடைசல்களாகவும், இருக்கைகள் சிதைந்தும் காணப்பட்டன.அதை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.

இதையடுத்து தமிழக அரசு கோவைக்கு ஆறு புதிய வெளிர் ஊதா நிற பஸ்களை அனுப்பிவைத்தன. அவை கோவையிலுள்ள பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீதரன் கூறியதாவது: கோவை மண்டலத்தில் மொத்தம் 961 பஸ்களை இயக்குகிறோம். அதில் 602 டவுன்பஸ்கள்.இது தவிர தற்போது 26 டவுன்பஸ்கள் புதிய பஸ்களாக விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 6 புதிய பஸ்கள் கோவை மண்டலத்துக்கு வந்தது. அவை மகளிர் இலவசமாக பயணிக்கும் டவுன்பஸ்களாக விடப்பட்டுள்ளன. அவை வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும். இனி வரும் பஸ்களும் அதே நிறத்தில் இருக்கும். அதன் முகப்பில் மகளிர் பயணிக்க கட்டணமில்லை என்று எழுதப்பட்டிருக்கும்.

படிப்படியாக பழைய பஸ்கள் நிறுத்தப்பட்டு புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். அதற்கான அனைத்துப்பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us