/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையில் அடிக்கடி மின்வெட்டு; பொதுமக்கள் தவிப்பு
/
கோடையில் அடிக்கடி மின்வெட்டு; பொதுமக்கள் தவிப்பு
ADDED : மே 05, 2024 11:16 PM

ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு பின்புறம் உள்ள, மார்க்கெட் எதிரே அளவு கடந்த குப்பையை மூட்டைகளாக கட்டி ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -பெருமாள், பொள்ளாச்சி.
அடிக்கடி மின்வெட்டு
கிணத்துக்கடவு பகுதியில், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் கோடை காலத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகமாக மின் வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும்.
- -ரமேஷ், கிணத்துக்கடவு.
அடையாளம் இல்லை
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டா ரோட்டில் ஏற்படும் விபத்தை தடுக்க, ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில், வெள்ளை கோடுகள் இல்லாமல் இருப்பதால், இங்கு வேகத்தடை இருபது சரி வர தெரியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இதில், வெள்ளை கோடுகள் அமைக்க வேண்டும்.
- -ரஞ்சித், பொள்ளாச்சி.
நிழற்கூரை வருமா
கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் வெயிலில் நீண்ட நேரம் நின்று சிரமப்படுகின்றனர். இதனால் சிரமம் ஏற்படுவதுடன் உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்.
-- மணிமாறன், கிணத்துக்கடவு.
வாகன ஓட்டுநர்கள் அவதி
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைக்கு தீ வைத்ததில், ஏற்பட்ட புகை சர்வீஸ் ரோடு வரை சென்றதால், வாகன ஓட்டுநர்கள் அவதி அடைந்தனர். இது போன்று அடிக்கடி இங்கு குப்பைக்கு தீ வைப்பதால் சிரமம் ஏற்படுகிறது. இதை பள்ளி நிர்வாகம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கதிர், கிணத்துக்கடவு.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை ராமசாமி நகர் ரயில்வே பாலம் அருகே குப்பை திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வசந்தி, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தினசரி சந்தை ரோட்டில் வாகனங்கள், தள்ளுவண்டிகள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்வதற்கும் இடையூராக உள்ளது. ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- சரவணன், உடுமலை.
ரோட்டை சரிசெய்யணும்
உடுமலை ஒன்றியம் போடிபட்டி அங்கன்வாடி ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.
-பவித்ரா, உடுமலை.
நகராட்சி கவனத்துக்கு
உடுமலை ராஜேந்திரா ரோடு முக்கிய போக்குவரத்து உள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினால் அடிக்கடி வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை உடனே சரி செய்ய வேண்டும்.
- சுப்ரமணி, உடுமலைப்பேட்டை.
எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, மலையாண்டிபட்டணம் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல வாகன ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது.
- நந்தகோபால், போடிபட்டி.
மேம்பாலத்தில் பள்ளம்
உடுமலை தளி ரோடு மேம்பாலத்தில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.