/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நண்பர்களை இறுதிவரை பாதுகாக்க வேண்டும்'
/
'நண்பர்களை இறுதிவரை பாதுகாக்க வேண்டும்'
ADDED : ஆக 10, 2024 01:05 AM

கோவை;இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ ரங்கநாதர் தொழில் நிறுவன மனித வளம், தொழில்துறை உறவுகள் புலத்தின் துணைத் தலைவர் குருசெல்வராஜ் பேசுகையில், ''கல்வி கற்கும் காலத்தில் கல்வியுடன் நல்ல தோழமையும் அவசியம். நல்ல நண்பர்களை வாழ்நாளின் இறுதிவரை அழியாமல் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் மேற்படிப்பு பயிலும் காலகட்டத்தை, மிகவும் பயனுடையதாக தங்கள் வாழ்வில் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு, சிறந்த நண்பர்களின் துணையோடு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

