/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரை முதல் பங்குனி வரை... என்னென்ன பயிர் செய்யலாம்! முன்னோடி விவசாயிகள் 'டிப்ஸ்'
/
சித்திரை முதல் பங்குனி வரை... என்னென்ன பயிர் செய்யலாம்! முன்னோடி விவசாயிகள் 'டிப்ஸ்'
சித்திரை முதல் பங்குனி வரை... என்னென்ன பயிர் செய்யலாம்! முன்னோடி விவசாயிகள் 'டிப்ஸ்'
சித்திரை முதல் பங்குனி வரை... என்னென்ன பயிர் செய்யலாம்! முன்னோடி விவசாயிகள் 'டிப்ஸ்'
ADDED : செப் 04, 2024 12:58 AM
பெ.நா.பாளையம்;'பட்டம் பார்த்து பயிர் செய்தால், விவசாயத்தில் நிச்சயம் வெற்றி உண்டு' என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
உகந்த தட்பவெப்ப சூழ்நிலை, காற்றோட்டம் இருக்கும்போது, பயிர் அதிக மகசூல் தரும். அதுவே அந்த பயிருக்கு உகந்த பட்டம் எனலாம். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில், மீண்டும் அதே பயிரை சாகுபடி செய்தால், நிலத்தின் வளமும், மகசூலும் குறைய வாய்ப்புள்ளது.
மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது, முந்தைய பயிர்களின் கழிவுகள் எருவாக பயன்படுவதோடு, முந்தைய பயிர்களின் நோய்களும் எளிதில் தாக்குவது இல்லை என்கின்றனர் விவசாயிகள்.
முன்னோடி விவசாயிகள் தரும் 'டிப்ஸ்':
l சித்திரை, வைகாசியில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், சோளமும்; வைகாசி, ஆனியில் பூசணி, வெண்டை, தென்னையும் பயிரிடலாம்.
l ஆனி, ஆடி, ஆவணியில் அவரை, மிளகாய், பூசணி, முள்ளங்கி, புடலை, உளுந்து, தட்டப்பயிறு, துவரை, மொச்சை, பாசிப்பயிறு பயிரிடலாம்.
l ஆவணி, புரட்டாசியில் செடி முருங்கை, மிளகாய், நெல், பருத்தியும், புரட்டாசி, ஐப்பசியில் வெங்காயம், கொண்டக்கடலை, நெல், பருத்தி பயிரிடலாம்.
l மார்கழி முதல் மாசி வரை கத்தரி, மிளகாய், தக்காளி, பாகற்காய், கொத்தவரை, சுரைக்காய், பீர்க்கன், கோவைக்காய், கீரை பயிரிடலாம்.
l மார்கழி, தை மாதங்களில் கத்தரி, மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு பயிரிடலாம்.
l தை, மாசி, பங்குனியில் கத்தரி, மிளகாய், தக்காளி, பாகற்காய், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய், கீரை வகைகள், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம், கரும்பு, பருத்தி பயிரிடலாம். பயிரிடும் விதை தரமானதாக இருந்தால், அதிக மகசூல் கிடைக்கும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.