/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்
/
சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்
சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்
சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்
ADDED : மே 18, 2024 11:52 PM

கோவை:சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வழங்கு வாய்க்காலில் திறந்து விடப்பட்ட மழை நீர், வேடப்பட்டி மயானம் வரை வந்தடைந்தது.
கோவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. சிறுவாணி அடிவாரம் மற்றும் கோவை குற்றாலத்தில் இருந்து மழை நீர் ஆற்றில் வந்தது.
கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நீர் வருவதற்காக, சித்திரைச்சாவடி அணைக்கட்டில் உள்ள மூன்று மதகுகளும் திறந்து விடப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், வாய்க்கால் துார்வாரப்பட்டு இருந்ததால், வேடப்பட்டி மயானம் வரை மழை நீர் தங்குதடையின்றி வந்தடைந்தது.
நம்பியழகன்பாளையத்தில் நாகராஜபுரம் என்ற இடத்தில் வாய்க்கால் குறுக்கே செல்லும் பாலத்தை அகலப்படுத்த தோண்டப்பட்டு இருக்கிறது. அதற்காக வாய்க்கால் குறுக்கே மண்ணை கொட்டி, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குளத்துக்கு நீர் வர முடியாத சூழல் இருக்கிறது.
மேலும், நாகராஜபுரத்தில் இருந்து கிருஷ்ணாம்பதி குளம் வரை நீர் வழங்கு வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், உக்கடம் பெரிய குளம் மற்றும் குறிச்சி குளத்துக்கு மழை நீர் செல்லக்கூடிய வாய்க்கால் துார்வாரும் பணியில், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீரை குளங்களில் சேகரிக்க, நீர் வழங்கு வாய்க்கால்கள் துார்வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சேத்துமா வாய்க்காலில் ஒரு குழாய் உடைந்து,மீண்டும் நொய்யல் ஆற்றுக்கே தண்ணீர் திரும்பிச் செல்வதாக கூறினர். அப்பகுதியில் மட்டும் ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்பு குழாய் பதிக்க அறிவுறுத்தியிருக்கிறேன். உக்கடம் குளத்துக்கு நீர் வரும் சேத்துமா வாய்க்கால், குறிச்சி குளத்துக்கு நீர் வரும் ராஜவாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
- சிவகுரு பிரபாகரன்,மாநகராட்சி கமிஷனர், கோவை

