/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு பழவகை மரக்கன்றுகள்
/
பள்ளி மாணவர்களுக்கு பழவகை மரக்கன்றுகள்
ADDED : ஜூலை 25, 2024 10:40 PM

ஆனைமலை : ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின், தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளி மாணவர்கள் வீடுகளில் வளர்க்க ஆண்டுதோறும் கொய்யா, சீதா, சப்போட்டா, மாதுளை போன்ற பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள் வீடுகளில் பழ வகை மரங்கள் வளர்ந்து பயனளிப்பதோடு, மாணவர்களின் வீட்டு பகுதிகளுக்கு தினம் தோறும் வருகை தரும் பறவைகளுக்கும் உணவாக பயன்படுகிறது.
அதன் அடிப்படையில், இவ்வாண்டும் பள்ளி மாணவர்களுக்கு பழ வகை மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
பள்ளியின் செயலர் ரங்கசாமி, கொய்யா, நெல்லி, சீதா, மாதுளை, பெரு நெல்லி போன்ற மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கினார். மொத்தம், 1,100 பழவகை மரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.