/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எரிபொருள் துகள்கள் தயாரிப்பு பயிற்சி
/
எரிபொருள் துகள்கள் தயாரிப்பு பயிற்சி
ADDED : செப் 05, 2024 12:09 AM
மேட்டுப்பாளையம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில், வேளாண் காடுகள் வணிகக் காப்பகத்தில் இரண்டு நாள் வேளாண் மற்றும் மரக்கழிவுகளைக் கொண்டு உயிர் எரிகட்டிகள் தயாரிக்கும் தொழில் நுட்பம், எரிபொருள் மற்றும் தீவனத்துகள்கள் தயாரிக்கும் தொழில் நுட்ப பயிற்சி, நேற்று நடந்து முடிந்தது. இப்பயிற்சியில், வேளாண் காடுகள் வணிகக் காப்பகத்தில் பேராசிரியர்கள் இதற்கான செய்முறை பயிற்சி, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, விற்பனை யுக்திகள் மற்றும் தொழிற்சாலைகளில் இதற்கான பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.