/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை
/
கோவில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED : மே 23, 2024 11:21 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் கோவில் வீதியில் வைகாசி பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி நாளையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. சுவாமிக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில், தளிரோடு காமாட்சி அம்மன் கோவில், சவுடாம்பிகை அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை தலைகொண்டஅம்மன் கோவில், சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் கோவில்களில், இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
* உடுமலை பெரியகடைவீதி நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பவுர்ணமியையொட்டி, கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், கோவில் வளாகத்தில் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.