/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்னிச்சர் உலகம்; பார்த்தா கண்கள் மிரளும்!
/
பர்னிச்சர் உலகம்; பார்த்தா கண்கள் மிரளும்!
ADDED : ஆக 18, 2024 01:09 AM

கண்காட்சியில் எளிய பட்ஜெட்டில் இருந்து கிளாஸிக்கான பர்னிச்சர்கள் வரை, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக் கேற்ப தேர்வு செய்யலாம்.ஆல்பா பர்னிச்சரில், நிலம்பூர் தேக்கில் செய்யப்பட்டவை முதல் மர வேலைப்பாடுகள் நிறைந்த சோபா, கட்டில், வார்ட்ரோப், சைடு டேபிள், டைனிங் டேபிள் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
உயர்தரத்துக்கு புகழ்பெற்ற நியூமென்ஸ் பர்னிச்சர், தரமும் சேவையுமே எங்களின் 50 ஆண்டுகால நம்பிக்கையான அடையாளம். வாங்கும்போது மட்டுமல்ல விற்பனைக்குப் பின்னும் எங்களின் சேவை, இணை பிரியா பந்தமெனத் தொடரும் என்கின்றனர். இங்கு கம்ப்யூட்டர் டேபிள் முதல் இத்தாலியன் லெதரில் உருவான சோபா வரை ஒவ்வொன்றிலும் ஏராளமான ரகங்கள் உள்ளன. வுட்ஸ்பார்க் ஸ்டாலில், கண்காட்சியில் புக்கிங் செய்வதற்காகவே பிரத்யேக ஆபர் வழங்குகின்றனர். வேறெங்கும் இந்த ஆபர் வழங்குவதில்லை. மாடுலர் கிச்சன்களில் வெரைட்டி காட்டி மிரட்டுகின்றனர். குட்டிக் கோவில் போன்ற பூஜை அறை, ஜெனியூன் லெதரில் வாடிக்கையாளர் விரும்பும் கலரில் சோபா தருகின்றனர்.
தவிர, பர்மா தேக்கில் செய்யப்பட்ட மைசூர் வேலைப்பாடுகள் நிறைந்த பர்னிச்சர்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன.
ஸ்பேஸ் சேவிங் பர்னிச்சர்
வீட்டை அடைத்துக் கொள்ளாத அளவுக்கு, ஸ்பேஸ் சேவிங் பர்னிச்சர்கள் வேண்டும் என்பவர்களுக்கும் ஸ்டால்கள் உள்ளன. பர்ன் டச் அரங்கில், லக்ஸுரி சோபா பெட்கள், மூன்று விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பட்ஜெட் விலையிலும் கிடைக்கும் சோபா கம் பெட்களை, பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக் கான ஸ்டடி டேபிள் உள்ளிட்டவையும் கிடைக்கின்றன.