/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆ' குறுமைய விளையாட்டில் கணபதி அரசு பள்ளி அபாரம்
/
'ஆ' குறுமைய விளையாட்டில் கணபதி அரசு பள்ளி அபாரம்
ADDED : ஆக 06, 2024 11:15 PM

கோவை : பள்ளிக்கல்வித்துறையின் 'ஆ' குறுமைய பூப்பந்து மற்றும் கேரம் போட்டியில், சிறப்பாக விளையாடி மாணவ மாணவியர், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 'ஆ' குறுமைய விளையாட்டு போட்டிகள் சி.எம்.எஸ்., பள்ளி சார்பில் நடக்கின்றன. இதன் பூப்பந்து மற்றும் கேரம் போட்டிகள், ஸ்ரீ ராமகிஷ்ணா மெட்ரிக்., பள்ளியில் நடந்தது.
இப்போட்டியில் பங்கேற்க கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், 14 வயதிற்குட்பட்டோருக்கான பூப்பந்து மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கேரம் இரட்டையர் விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதேபோல், 14 வயது, 19 வயது பிரிவில் மாணவர்கள் மற்றும் 17 வயது பிரிவில் மாணவியர் பூப்பந்து போட்டியில், இரண்டாம் இடம் பிடித்தனர்.
17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான கேரம் இரட்டையர், 19 வயதிற்குட்பட்ட மாணவயர் கேரம் ஒற்றையர் போட்டியில், இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமாலா, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் வாழ்த்தினர்.