/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வு கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வு கூட்டம்
ADDED : செப் 04, 2024 11:25 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக, சிறப்பு கலந்தாய்வு கூட்டம், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும், சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முன்னேற்பாடுகள், மாசு கட்டுப்பாடு, மின்சாரம், ஒலிபெருக்கி மற்றும் என்.ஓ.சி., தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
விசர்ஜனம் செய்வதற்கு சிலைகள் எடுத்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து போலீசார் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.