/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்க்குமிழிக்குள் விநாயகர்... கருவிழிக்குள் தேசியக் கொடி!
/
நீர்க்குமிழிக்குள் விநாயகர்... கருவிழிக்குள் தேசியக் கொடி!
நீர்க்குமிழிக்குள் விநாயகர்... கருவிழிக்குள் தேசியக் கொடி!
நீர்க்குமிழிக்குள் விநாயகர்... கருவிழிக்குள் தேசியக் கொடி!
ADDED : செப் 07, 2024 11:23 PM

ஒரே வார்த்தை, ஒரு பார்வை, ஒரு செய்கை... வழக்கமாக இல்லாமல், சற்று வித்தியாசமாக இருந்தால், உற்றுப் பார்க்க வைக்கும்.
அப்படியான ஒரு பாராட்டும் விஷயத்தை தான், கோவையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் பாலசந்தர் செய்து வருகிறார்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, கோவில்கள், வீடுகளில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு வரும் நிலையில், அதை நீர் குமிழி புகைப்படம் வாயிலாக பார்த்தால், எப்படி இருக்கும் என்று சிந்தித்து செயல்படுத்தியுள்ளார்.
இதற்கு அவருக்கு தேவைப்பட்டது ஒரு சிரிஞ்சு தான். ஊசிக்குள் தண்ணீர் செலுத்தி, அதை அழுத்தும் போது வரும் நீர்குமிழியில், முன்னே வைக்கப்பட்ட உருவம், அட்டகாசமாய் தெரியும்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகளை மொபைல் போனில் உள்ள, மைக்ரோ லென்ஸ் வாயிலாக படம் பிடித்துக்காட்டி அசத்தியுள்ளார்.
சுதந்திர தினத்திலும், தேசியக் கொடியை பறக்க விட்டு, இதே போல் உருவாக்கி, படம் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் திருச்சி மாவட்டம் பெரம்பலுாரில் நடந்த 185வது உலக புகைப்பட தினவிழாவில், கண்ணின் கருவிழியில், தேசியக் கொடி இருப்பது போன்று இவர் எடுத்த, இதே நடைமுறை புகைப்படம், விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் பாலசந்தர்...உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!