/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகனே... வெற்றி விநாயகனே போற்றி...போற்றி! பொது இடங்களில் பிரதிஷ்டை, சிறப்பு பூஜை
/
விநாயகனே... வெற்றி விநாயகனே போற்றி...போற்றி! பொது இடங்களில் பிரதிஷ்டை, சிறப்பு பூஜை
விநாயகனே... வெற்றி விநாயகனே போற்றி...போற்றி! பொது இடங்களில் பிரதிஷ்டை, சிறப்பு பூஜை
விநாயகனே... வெற்றி விநாயகனே போற்றி...போற்றி! பொது இடங்களில் பிரதிஷ்டை, சிறப்பு பூஜை
ADDED : செப் 08, 2024 11:23 PM

உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தி விழா, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணிக்கு, கணபதி ேஹாமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, சுவாமிக்கு, தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், பழச்சாறு, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 7:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, அருள்பாலித்தார்.
* உடுமலை ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவிலில், காலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, விநாயகர் கோவில்களில், நேற்றுமுன்தினம், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகள், தளி, கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 6 அடி முதல், 11 அடி உயரமுள்ள, பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதே போல், வீடுகளிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது.
* ஹிந்து முன்னணி, வி.எச்.பி., ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து சாம்ராஜ்யம், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், பந்தல் அமைத்து, மாவிலை தோரணம் கட்டும், வண்ண கோலமிட்டும், கலாசார விழாவாக கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில், 300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இன்று (9ம் தேதி), உடுமலை நகரம் மற்றும் எரிசனம்பட்டியில், ஹிந்து முன்னணி சார்பில் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, இந்து சாம்ராஜ்யம், வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகள் பிரதிஷ்டை செய்த, சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
நாளை (10ம் தேதி), மடத்துக்குளம் பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இந்து சாம்ராஜ்யம், வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், மடத்துக்குளம், குமரலிங்கம், கடத்துார் , கணியூர் பகுதிகளிலும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. வரும், 11ம் தேதி, சிவசேனா சார்பில், விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
பொள்ளாச்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், தினமும், மங்கள இசை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
* கடைவீதி பால கணேசர் கோவிலில், கணபதி ஹோமம், அலங்கார பூஜைகள் நடை பெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* குமரன்நகர், ரங்கசாமிலேஅவுட் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.ராமநாதபுரம் ஊர் சார்பில் பசுமை விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வால்பாறை
வால்பாறை ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவில் மற்றும் வீடுகளில், 108 விநாயகர் சிலைகள் நேற்றுமுன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. அதன்பின் விநாயகருக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
* வால்பாறை சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.
* வால்பாறை அண்ணாநகர், கலைஞர்நகர், காமராஜ்நகர், கக்கன்காலனி, திருவள்ளுவர் நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் கூறுகையில், ''வால்பாறையில், பல்வேறு கோவில்களில், மூன்று அடி முதல், 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
தொடர்ந்து, 8 நாட்கள் வழிபாட்டுக்கு பின், வரும், 15ம் தேதி காலை, 12:00 மணிக்கு அனைத்து சிலைகளும் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்,' என்றார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 43 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதில், கடந்த இரண்டு நாட்களில், நான்கு சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டில் உள்ள சிலைகள் ஓரிரு தினங்களில் கரைக்கப்படும். இதில், சில சிலைகள் கிணற்றிலும், சில சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றிலும் கரைக்கப்படும்.