/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை தொட்டியில்லா வார்டு உதயம்! இதர வார்டுகளுக்கு முன் உதாரணம்
/
குப்பை தொட்டியில்லா வார்டு உதயம்! இதர வார்டுகளுக்கு முன் உதாரணம்
குப்பை தொட்டியில்லா வார்டு உதயம்! இதர வார்டுகளுக்கு முன் உதாரணம்
குப்பை தொட்டியில்லா வார்டு உதயம்! இதர வார்டுகளுக்கு முன் உதாரணம்
ADDED : மார் 26, 2024 11:58 PM

கோவை;குப்பை மேலாண்மையில் திணறி வந்த மாநகராட்சியில், தற்போது குப்பை தொட்டியில்லாத பகுதியாக, தெற்கு மண்டலத்தில் ஒரு வார்டு உருவாகி, இதர வார்டுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகாரமாகிறது. தற்போது, 2,129 நிரந்தரம், 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் குப்பை மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை, 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் மேற்கொள்கின்றனர்.
துவக்கத்தில் குப்பை மேலாண்மை மோசமாக இருந்ததால், ரோடுகளில் குப்பை தேக்கம் பெரும் தலைவலியாக இருந்தது.
இதையடுத்து, 'ரூட் சார்ட்' தயாரித்தல், அபராதம் விதித்தல் நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. மண்டல, மன்ற கூட்டங்களில் குப்பை பிரச்னையே வார்டு கவுன்சிலர் மத்தியில் பிரதானமாக இருந்தது.
இச்சூழலில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குப்பை தொட்டியில்லா நகரை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காந்திபுரம், சிவானந்தா காலனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் குப்பை தொட்டிகள் குறைக்கப்பட்டு, அந்த இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதன் பலனாக, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 98வது வார்டு சாரதா மில் ரோடு, சிட்கோ, பொள்ளாச்சி ரோடு பகுதிகளில், குப்பை தொட்டிகள் அனைத்தும் நீக்கப்பட்டு குப்பை மேலாண்மையில், மக்கள் மத்தியில் 'சபாஷ்' பெற்றுள்ளது.
அந்த வார்டில் தினமும், 7-8 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. வீடு வீடாக துாய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். பொது மக்களும் ரோட்டில் குப்பை கொட்டாமல், முறையாக தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்கி வருகின்றனர்.
கமிஷனர் பாராட்டு
இரு வாரங்களுக்கு முன், இந்த மாற்றத்துக்கு காரணமான துாய்மை பணியாளர்களை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.
இதர வார்டு கவுன்சிலர்களும், 98வது வார்டில் 'விசிட்' செய்து, குப்பை மேலாண்மை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

