/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடை அருகே குப்பை குவிப்பு; துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
நீரோடை அருகே குப்பை குவிப்பு; துர்நாற்றத்தால் மக்கள் அவதி
நீரோடை அருகே குப்பை குவிப்பு; துர்நாற்றத்தால் மக்கள் அவதி
நீரோடை அருகே குப்பை குவிப்பு; துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : மார் 09, 2025 11:03 PM

சுகாதாரம் பாதிப்பு
சோமந்துறை கிராமத்தில் உள்ள நீரோடை அருகே, அளவுக்கு அதிகமாக குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நீர் தேக்கப்பகுதியும் பாதிக்கப்படுவதால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- கோபால், பொள்ளாச்சி.
குழியை எப்ப மூடுவீங்க!
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் ஓரத்தில், குழாய் சீரமைப்பு செய்ய குழி தோண்டப்பட்டது. 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. சீரமைப்பு பணி முடிந்தும் குழி மூடாமல் உள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
நாய் தொல்லை அதிகம்
பொள்ளாச்சி நகராட்சி, 21வது வார்டு பகுதியில் அதிகளவு தெருநாய்கள் ரோட்டில் உலா வருகின்றன. இதில் சில நாய்கள் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று கடிக்க வருகின்றன. இதனால், மக்கள் ரோட்டில் செல்ல அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் கவனித்து, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலாஜி, பொள்ளாச்சி.
குப்பையை எரிக்காதீங்க!
பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் புளியம்பட்டி பகுதியில் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு குப்பை கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதேபோன்று தொப்பம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மற்றும் உடுமலை ரோட்டில் தனியார் கல்லூரி அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பை எரிக்கப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
- திருமலைசாமி, பொள்ளாச்சி.
குப்பையை அகற்றுங்க
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சியினர் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரவன், உடுமலை.
ரோடு சேதம்
வடசித்தூரிலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் ரோடு ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால், மக்கள் வாகனங்களில் சென்று வர அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரோட்டை மக்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும்.
- கோபால், நெகமம்.
இருளில் தென்னைமரத்து வீதி
உடுமலை, தென்னைமரத்து வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இரவில் திருட்டு பயமும் அதிகரிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் சில நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- சங்கரன், உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் கழிவுநீர் செல்வதற்கும் வழியில்லாமல் குடியிருப்புகளில் கழிவுநீர் வெளியேறுகிறது.
- தாமோதரன், உடுமலை.
அடையாளம் இல்லை
உடுமலை, ஐஸ்வர்யா நகர் பகுதியில் வேகத்தடைகள் அடையாளமில்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் வேகத்தடை இருப்பதை அறியாமல் தடுமாறுகின்றனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதால் வேகத்தடைகளுக்கு அடையாளம் போட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ராஜேஸ்வரி, உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுவதால் மற்ற வாகன ஓட்டுநர்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
- மதிவாணன், உடுமலை.
குப்பை எரிப்பு
உடுமலை, சர்தார் வீதியில் குப்பைக்கழிவுகளை வீதியில் எரிக்கின்றனர். கழிவுகளில் இருந்து பறக்கும் புகையால் வாகன ஓட்டுநர்களும், அருகிலுள்ள பகுதி மக்களும் அவதிப்படுகின்றனர். அதிகமான காற்று வீசுவதால் தீப்பொறிகள் பறந்து விபத்து ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
- பாரதி, உடுமலை.
செடிகளை அகற்றுங்க
உடுமலை நகராட்சி 21 வது வார்டு மாணிக்கம் பிள்ளை சந்தில் மழை நீர் வடிகால் தூர்வாரப்படாமல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த செடிகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- முருகன், உடுமலை.