/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புழுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு மிளகாய் இஞ்சி கரைசல்
/
புழுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு மிளகாய் இஞ்சி கரைசல்
புழுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு மிளகாய் இஞ்சி கரைசல்
புழுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு மிளகாய் இஞ்சி கரைசல்
ADDED : மார் 12, 2025 11:13 PM
பெ.நா.பாளையம்; காய்கறி சாகுபடியில் பூச்சிகள் பெருகுவதை தடுக்க பூண்டு, மிளகாய், இஞ்சி கரைசல் தயார் செய்து, தெளித்து கட்டுப்படுத்தலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
காய்கறி வேளாண்மையில் காய் துளைப்பான், தண்டு துளைப்பான், மாவு பூச்சி, வெள்ளை ஈ உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இவை காய்கறி விளைச்சலை தடுத்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க பூண்டு, மிளகாய், இஞ்சி கரைசல் உருவாக்கி தயார் செய்து கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக தோல் நீக்கப்பட்ட நாட்டுப்பூண்டு,180 கிராம், இஞ்சி,90 கிராம், பச்சை மிளகாய்,90 கிராம் ஆகியவற்றை மிக்ஸி அல்லது அரவைக்கல் வாயிலாக நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை, 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில், 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கரைக்கப்பட்ட கரைசல் பின்னர் வடிகட்டி உடனடியாக பயன்படுத்தலாம்.
இது, 25 சதவீதம் பயிர் ஊக்கியாகவும், 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. இது இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பாகும். இந்த கரைசலால் பூச்சிகள் பயிர்களை உண்ணாது.
பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படும். பூச்சி விரட்டியாகவும் பூஞ்சான கொல்லியாகவும் பயன்படுத்தலாம். புழுக்களை கட்டுப்படுத்தும். பழ மரங்களை தாக்கும் புழுக்கள், வண்டுகளையும் அழிக்கும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.