/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூண்டு கிலோ ரூ.470க்கு விற்பனை
/
பூண்டு கிலோ ரூ.470க்கு விற்பனை
ADDED : செப் 02, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், பூண்டு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ பூண்டு அதிகபட்சமாக ரூ. 470க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூண்டு அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 470க்கு ஏலம் போனது. கடந்த வாரமும் ரூ.470க்கும் ஏலம் போனது. நேற்று விற்பனை கூடத்திற்கு 130 பூண்டு மூட்டைகள் வந்தன.
ஒரு மூட்டை சரசரியாக 50 கிலோ வரை இருக்கும். தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.