/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தயாராகிறது ஓட்டு எண்ணிக்கை மையம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு
/
தயாராகிறது ஓட்டு எண்ணிக்கை மையம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு
தயாராகிறது ஓட்டு எண்ணிக்கை மையம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு
தயாராகிறது ஓட்டு எண்ணிக்கை மையம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 23, 2024 10:18 PM
கோவை, கோவை தொகுதியில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணும் மையத்தை, தயார்படுத்தும் பணி துவங்கியிருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில் பதிவாகும் ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரியில் எண்ணப்படும். இம்மையத்தை தயார்படுத்தும் பொறுப்பு, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான குழுவினருக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஜி.சி.டி., மெயின் பில்டிங்கில், ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. தரைத்தளத்தில் இரண்டு தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்படும். முதல் தளத்தில் ஒவ்வொரு திசைக்கும் ஒரு தொகுதி என, நான்கு திசைகளில் நான்கு தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ண, அறை ஒதுக்கப்படுகிறது.
ஓட்டுகள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், விவி கேட் இயந்திரங்கள் அனைத்தும் இருப்பு வைக்க, 'ஸ்ட்ராங் ரூம், தேர்தலுக்கு பயன்படுத்திய இதர பொருட்கள் வைக்க இருப்பு அறை, ஆகியவை தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளன.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நேரில் வரவழைத்து, அறை எண்கள் தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் எந்த வழியாக வர வேண்டும்; அவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, ஓட்டு எண்ணுவதற்கு வரும் அலுவலர்கள் வரும் வழி; 'ஸ்ட்ராங் ரூமில்' இருந்து இயந்திரங்களை எடுத்து வரும் வழி, உள்ளிட்டவை விளக்கப்பட்டன.
வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அங்கீகாரம் பெற்ற ஏஜன்ட்டுகள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் வரும் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் மையம் தயார் செய்வதற்கான டெண்டர், ஏப்., 3ல் இறுதி செய்யப்படுகிறது. அதன்பின், ஓட்டு எண்ணும் அறைகளில் தடுப்பு அமைக்கும் பணி துவங்கும்.
இவ்வாறு, தேர்தல் பிரிவினர் கூறினர்.

