/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எச்., வளாகத்தில் குப்பை; அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
/
ஜி.எச்., வளாகத்தில் குப்பை; அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
ஜி.எச்., வளாகத்தில் குப்பை; அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
ஜி.எச்., வளாகத்தில் குப்பை; அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : செப் 09, 2024 12:05 AM

* வேகத்தடை தேவை
ஆனைமலையில் இருந்து, பழநி செல்லும் சாலையில் எலையமுத்தூர் அருகே, நால்ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்கும் போது அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, இங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -குகன், பொள்ளாச்சி.
* குப்பை கிடங்கான ஜி.எச்.,
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் முறையாக அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர். குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.
- -ராமசந்திரன், பொள்ளாச்சி.
கூடுதல் பஸ் தேவை
பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்ல அதிக அளவு பயணியர் இருந்தும், 20 நிமிடத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
-- -மணிவாசகம், பொள்ளாச்சி.
ரோட்டை சீரமைக்கணும்!
கிணத்துக்கடவு, அண்ணாநகரில் ரோட்டில் ஏற்பட்ட குழியில் செம்மண் நிரப்பி தற்காலிகமாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மழை பெய்யும் போது, ரோட்டில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ராஜ், கிணத்துக்கடவு.
செடிகளை அகற்றணும்!
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமத்தில் தனியார் பைக் ஷோரூம் அருகே, ரோட்டோரத்தில் புதர் சூழ்ந்துள்ளது. அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை உடனடியாக அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ரமேஷ், நெகமம்.
ரோடு போடுங்க சார்!
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், தேர்முட்டி பகுதியில் இருந்து, ஊஞ்சவேலாம்பட்டி வரையிலும், ரோடு உருக்குலைந்து உள்ளது. பல இடங்களில், ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ரோட்டில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாவது தொடர்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.
-- நிஜாம், பொள்ளாச்சி.
* இருளில் பஸ்ஸ்டாண்ட்
உடுமலை ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு சரிவர எரியாததால் பஸ் ஸ்டாண்ட் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை சரிசெயய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன, உடுமலை.
* நடைபாதை சேதம்
உடுமலை பைபாஸ் ரோட்டில், பயணியர் நடந்து செல்லும் பாதை சேதமடைந்துள்ளது. சில சமயங்களில், பயணியர் தவறுவதாக இந்த குழிக்குள் விழுந்து காயம் ஏற்படுகிறது. இதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்தி, உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, முத்து நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்புகளின் முன்பு கூட்டமாக உலா வருவதும், வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதால் அப்பகுதி மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்.
- ராஜ்குமார், உடுமலை.
சாயும் நிலையில் மின்கம்பங்கள்
உடுமலை, ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் சாய்ந்துள்ளது. பொதுமக்கள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் கடந்துசெல்கின்றனர். காற்று பலமாக வீசும் நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
- மோகன், உடுமலை.
ரோட்டை சமப்படுத்தணும்
உடுமலை, பசுபதி வீதியில் பாதாள சாக்கடை குழியில் பழுது பார்க்கும் பணிகளுக்கு ரோடு தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பின் ரோடு சமன்படுத்தப்படாமல் அப்பகுதியில் பள்ளமாக மாறிவிட்டது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரோட்டை பராமரிக்க வேண்டும்.
- மணிகண்டன், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, புஷ்பகிரி வேலன் நகர் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இரவு நேரங்களில் மிகவும் இருள் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பில்லாத சூழலாகவும் மாறுவதால் திருட்டு பயம் ஏற்படுகிறது.
- ஜெயலட்சுமி, உடுமலை.