/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வனவிலங்குகள் நடமட்டம் குறித்து தகவல் கொடுங்க!'
/
'வனவிலங்குகள் நடமட்டம் குறித்து தகவல் கொடுங்க!'
ADDED : ஜூலை 11, 2024 10:17 PM
வால்பாறை : வால்பாறை அருகேயுள்ள, மானாம்பள்ளி வனச்சரகத்தின் புதிய வனச்சரக அலுவலராக கிரீதரன் பொறுப்பேற்றுள்ளார்.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்த மணிகண்டன், உடுமலை வனச்சரகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய வனச்சரக அலுவலராக கிரீதரன் பொறுப்பேற்றுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''இயற்கை வளங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க, வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.
எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டால், அந்த பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்ககூடாது. தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடினால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிறுத்தை, கரடி, புலி பதுங்குவதை தவிர்க்க, எஸ்டேட்களில், குடியிருப்பு பகுதியிலுள்ள புதரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். சுற்றுலா வருவோர், வனத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்,'' என்றார்.