/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிணறு வெட்டுவதற்கு அனுமதி கொடுங்களேன்'
/
'கிணறு வெட்டுவதற்கு அனுமதி கொடுங்களேன்'
ADDED : மே 10, 2024 01:32 AM
கோவை:'விவசாய நிலங்களில் கிணறு வெட்டுவதற்கு அனுமதி தர வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இச்சங்க தலைவர் பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:
கோவை மாவட்டம் முழுவதும் கடுமையாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தை நம்பி, விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. தென்னை, வாழை, பாக்கு மற்றும் இதர பயிர் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய நலன் கருதி, விளைநிலங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்த அனுமதி தர வேண்டும். புதிய கிணறு வெட்டுவதற்கு காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.