ADDED : ஜூன் 26, 2024 09:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 24 மனை தெலுங்கு செட்டியாளர்கள் சேவா சங்கம் சார்பில், கல்வி தின விழா, வடுகபாளையம் காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.
இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், ஊக்கத்தொகை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல, 6 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.