/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவிலியர்களுக்கு ஜி.கே.என்.எம்., கவுரவம்
/
செவிலியர்களுக்கு ஜி.கே.என்.எம்., கவுரவம்
ADDED : மே 13, 2024 01:00 AM

கோவை;ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன், செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பல்வேறு போட்டிகளில் தனித்திறமையை வெளிப்படுத்திய செவிலியர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன.
நடப்பாண்டு, செவிலியர் தின கருப்பொருள் குறித்து பேசிய டாக்டர் மனோகரன், '' மருத்துவத்துறையின் எதிர்காலம், செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள்ளது,'' என்றார்.
மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள் உட்பட அனைவரும், செவிலியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.