/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்., வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாமாண்டு விழா
/
ஜி.கே.என்.எம்., வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாமாண்டு விழா
ஜி.கே.என்.எம்., வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாமாண்டு விழா
ஜி.கே.என்.எம்., வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாமாண்டு விழா
ADDED : மார் 06, 2025 06:17 AM

கோவை; கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவங்கப்பட்டுள்ள, ஜி.கே.என்.எம்., வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தின் முதலாமாண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் சி.இ.ஓ., ரகுபதி வேலுச்சாமி தலைமை வகித்தார். வண்ண பலுான்களை பறக்க விட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ''இம்மையத்தில், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனை போன்று அல்லாமல், வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டமைப்பு, தனி கவனிப்பு, உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், அளித்து வருகிறோம்,'' என்றார்.
முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பொது அறுவை சிகிச்சை, குடல், இரைப்பை, கல்லீரல், பெண்கள் மருத்துவம், சிறுநீரகம், சிறுநீரக அறுவை சிகிச்சை, இ.என்.டி., மன அழுத்த மேலாண்மை, பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இம்மாதம் முழுவதும், சலுகை கட்டணத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.