UPDATED : மார் 22, 2024 12:06 PM
ADDED : மார் 22, 2024 12:06 AM
போத்தனுார்:குறிச்சியில், பட்டிக்குள் நுழைந்த நாய்கள் கடித்து, ஐந்து ஆடுகள் பலியாகின.
குறிச்சி ஜி.கே.ஸ்கொயர் அருகேயுள்ள உப்பிலியர் திட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 69. இவர் மூன்று குட்டிகள் உள்பட எட்டு ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை, நாய்கள், ஆடு ஒன்றை கடித்துக்கொண்டிருப்பது கண்டு, சுப்புலட்சுமி நாய்களை துரத்தி, ஆட்டை காப்பாற்றினார். தொடர்ந்து ஆடுகளை பட்டிக்குள் கட்ட சென்றபோது, 20க்கும் மேற்பட்ட நாய்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. உள்ளே ஐந்து ஆடுகள் கழுத்தில் கடிபட்டு இறந்து கிடப்பதை கண்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், 'வெளியிடங்களிலிருந்து பிடிக்கப்படும் நாய்கள் இங்கு கொண்டு வந்து விடப்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள், கும்பல், கும்பலாக கற்றுகின்றன. முதியவர் மற்றும் ஒரு சிறுவனை நாய்கள் கடித்துள்ளன. குழந்தைகளை வெளியே விட பயமாக உள்ளது. ஆதலால் நாய்களை உடனடியாக இங்கிருந்து பிடித்துச் செல்லவேண்டும்' என்றனர்.

