/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லலிதாம்பிகை அம்மன்; நிலை வாசல்கால் பிரதிஷ்டை
/
லலிதாம்பிகை அம்மன்; நிலை வாசல்கால் பிரதிஷ்டை
ADDED : ஜூன் 10, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியதடாகம் லலிதாம்பிகை அம்மன் திருக்கோயில் நிலை வாசல்கால் பிரதிஷ்டை விழா நடந்தது.
பெரியதடாகம் லலிதாம்பிகை அம்மன் திருக்கோவிலில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இக்கோவிலில் நிலைவாசல்கால் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், நிலைவாசல் கல்லுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி செய்திருந்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

