ADDED : மார் 03, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர், திருநகர் காலனியை சேர்ந்தவர் அமுதா, 52.
நேற்று முன்தினம் மாலை உக்கடத்திலிருந்து, பி.கே.புதூருக்கு அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். பி.கே.புதூரில் வந்திறங்கியபோது, தனது கழுத்திலிருந்த இரண்டரை சவரன் தங்க நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.