/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய், இதயநோய்க்கு சிறந்தது வாட்டர் ஆப்பிள்; வீட்டு தோட்டத்தில் வளர்க்க அறிவுறுத்தல்
/
புற்றுநோய், இதயநோய்க்கு சிறந்தது வாட்டர் ஆப்பிள்; வீட்டு தோட்டத்தில் வளர்க்க அறிவுறுத்தல்
புற்றுநோய், இதயநோய்க்கு சிறந்தது வாட்டர் ஆப்பிள்; வீட்டு தோட்டத்தில் வளர்க்க அறிவுறுத்தல்
புற்றுநோய், இதயநோய்க்கு சிறந்தது வாட்டர் ஆப்பிள்; வீட்டு தோட்டத்தில் வளர்க்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 27, 2024 01:27 AM

பொள்ளாச்சி;வெயில் காலங்களில் நீர்ச்சத்து அதிகரிக்கவும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட  வாட்டர் ஆப்பிள் மரத்தை வீடுகளில் வளர்த்து பயன்பெறவேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் துறை பேராசிரியர் கவிதா தெரிவித்தார்.
வீட்டு தோட்டம் சார்ந்த விழிப்புணர்வு பரவலாக அதிகரித்துள்ளது. புதிதாக வீடு கட்டும் பலர் மாடித்தோட்டம் அமைக்கவும், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தோட்டம் அமைக்கவும் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
வீட்டில் உள்ள இடத்தில் ஏதாவது மரம் வளர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், வாட்டர் ஆப்பிள் மரமும் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதுகுறித்து, வேளாண் துறை உதவி பேராசிரியர் கவிதா கூறியதாவது:
வாட்டர் ஆப்பிள் அதிக மருத்துவ குணம் கொண்ட பழம். ஆனால், பலருக்கு அதன் நன்மை தெரிவதில்லை. 'வாட்டர் ஆப்பிள்' பழமானது, ஆப்பிள் மற்றும் கொய்யாவின் தனிச்சுவை கொண்டது.
உயரமாக மட்டுமே வளரக்கூடிய இம்மரத்தின் தாயகம் இந்தியா. இளம் சிவப்பு நிறம் மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இதில், 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் குறிப்பாக வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவும். இப்பழத்தில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
பிளாவனாய்டுகள் எனப்படும் பினாலிக் கலவைகள் இதய நோய், புற்றுநோய், மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது, மாசுக்கள் மற்றும் ரசாயனங்கள் காரணமாக உடலின்  செல் சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள, ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
கர்ப்பகாலத்தில், வாந்தி மயக்கம் ஏற்படுவதற்கும் இது சிறந்த மருந்தாக அமையும். தொடர்ந்து உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போது உள்ள இந்த வெப்பநிலைக்கு இப்பழத்தை அதிகம் உட்கொள்ளலாம்.
இதற்கான நாற்று, வேளாண் பல்கலை, வனத்துறை, தனியார் நர்சரியில் கிடைக்கும். வீட்டு தோட்டம் அமைக்கும் போது, இடம் இருப்பவர்கள் இம்மரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

