ADDED : மார் 29, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி மகாகாலேஷ்வர் தரிசனக் காட்சி, பட காட்சி விளக்கம் ஐந்து நாள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், வரசித்தி விநாயகர் கோவில் தலைவர் ஆனந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பிரம்மாகுமாரி ராஜேஸ்வரி பேசுகையில்,நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நிம்மதி நம்மை தேடி வரும். என்றார்.

