/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரணும்
/
பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரணும்
பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரணும்
பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரணும்
ADDED : மே 29, 2024 12:49 AM

வடவள்ளி:மருதமலை அடிவாரத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் பாதுகாப்பு அறையை மீண்டும் திறந்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த, 2019ம் ஆண்டு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் இலவச காலணிகள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டது.
இக்கட்டடம் கட்டப்பட்டு பல நாட்களுக்குப் பின்பே, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா காலத்தில், இந்த அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது, இந்த அறைகளுக்கு அருகே, முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.