/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டுடியோவில் ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
/
ஸ்டுடியோவில் ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
ஸ்டுடியோவில் ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
ஸ்டுடியோவில் ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
ADDED : ஏப் 30, 2024 11:50 PM
போத்தனூர்;குனியமுத்தூரை சேர்ந்த ரிச்சர்ட்சன், 29, பி.கே.புதூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். 27ம் தேதி ஸ்டுடியோவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை ஸ்டுடியோ ஷட்டர் பூட்டு, உட்புற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து ரிச்சர்ட்சன் சென்று பார்த்தபோது, உள்ளேயிருந்த கேமரா, கம்ப்யூட்டர், 10 ஆயிரம் ரொக்கம், ஹார்டு டிஸ்க் திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு, ரூ.1.7 லட்சம்.
குனியமுத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் ஆய்வில், இருவரது கைரேகை பதிவுகள் இருப்பது தெரிந்தது. சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், போலீசார் இருவரை தேடுகின்றனர்.