/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : பிப் 10, 2025 05:37 AM
கோவை : வரும் வாரத்தில் ஜன., மாத சம்பளம் கிடைக்கவில்லையேல் போராட்டத்தில் இறங்க அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமு அறிக்கையில்,'கோவை மாவட்டத்தில், 12க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இன்னும் ஜன., மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. கல்வி அதிகாரிகளின் மெத்தன போக்கினால் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு வரும் வாரத்திலாவது சம்பளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சம்பளத்தை உடனடியாக பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர்களை திரட்டி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.