/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு துவங்கியது; சிறப்பு பிரிவில் 90 மாணவர்கள் சேர்க்கை

ADDED : மே 31, 2024 01:44 AM
கோவை:அரசு கலை கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது.
இக்கல்லுாரியில், இரண்டு சுழற்சிகளின் கீழ், 23 பாடப்பிரிவுகளில், 1,433 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு விதிமுறைகளின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். சிறப்பு ஒதுக்கீட்டில், 127 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 178 பேர் விண்ணப்பித்ததில், 43 பேர் பங்கேற்றனர். 72 இடங்களில், 40 மாணவர்கள் சேர்க்கை புரிந்தனர். இதேபோன்று, விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு பிரிவு, அந்தமான் மற்றும் நிகோபார் தமிழ் மாணவர்கள் இடஒதுக்கீட்டு பிரிவுகளில், 90 மாணவர்கள் நேற்று சேர்க்கை புரிந்தனர்.
கல்லுாரி முதல்வர் உலகி கூறுகையில்,''முதலமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, 1,433 இடங்களுக்கு 36 ஆயிரத்து 55 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவில், 127 இடங்களுக்கு, 90 பேர் சேர்ந்தனர். தொடர்ந்து, ஜூன் 10 முதல் பொது கலந்தாய்வு துவங்கும்,'' என்றார்.