/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசிரியர்களை அரசு ஏமாற்றுகிறது'
/
'பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசிரியர்களை அரசு ஏமாற்றுகிறது'
'பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசிரியர்களை அரசு ஏமாற்றுகிறது'
'பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசிரியர்களை அரசு ஏமாற்றுகிறது'
ADDED : ஆக 06, 2024 12:50 AM
கோவை:''ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க பொய்யான வாக்குறுதிகள் அரசு அளித்து ஆசிரியர்கள் ஏமாற்றுகிறது,'' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு கூறினார்.
துவக்கக்கல்வித்துறையின், 243வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ - ஜாக்) மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு கூறியதாவது:
எங்களின் நியாயமான கோரிக்கைகளை, அரசு நீண்ட காலமாக நிறைவேற்றாமல் இருந்ததால்தான் போராட்டத்தில் இறங்கினோம். எங்களின் 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 243 அரசாணை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
ஆனால் கல்வித்துறைச் செயலாளருடன் நடத்திய பேச்சு வார்த்தையில், நிதி சாராத ஒன்பது கோரிக்கைகளை, அரசு பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். இந்த மாதம் இறுதிவரை அவகாசம் கேட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. போராட்டத்தை தடுப்பதற்காக அரசு பொய்யான வாக்குறுதி அளித்து, ஆசிரியர்களை ஏமாற்றுகிறது. ஆசிரியர்கள் இனி அதை நம்ப தயாரில்லை.
இந்த மாதம், 'டிட்டோ ஜாக்' உயர் மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில், தொடர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.