/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வரும் 30ம் தேதி வரை 'டைம்' இருக்கு
/
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வரும் 30ம் தேதி வரை 'டைம்' இருக்கு
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வரும் 30ம் தேதி வரை 'டைம்' இருக்கு
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வரும் 30ம் தேதி வரை 'டைம்' இருக்கு
ADDED : செப் 07, 2024 01:31 AM
கோவை:கோவையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை
கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டியிலுள்ள, கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024ம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை, வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சிக்கட்டணம் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவன்டி, பஸ் பாஸ், சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், புத்தகங்கள் அரசால் இலவசமாக வழங்கப்படும்.
பிரதி மாதம் 750 ரூபாய்- வீதம், வருகை அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு 1000 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும்.
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், தகுதியான மாணவர்களுக்கு 1000 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். இதற்கு பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். வயது வரம்பு 14 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 0422- 2642041, 88254 34331, 80727 37402 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.