/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு
/
அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு
அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு
அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு
ADDED : பிப் 15, 2025 07:05 AM
மேட்டுப்பாளையம்; சென்னையில் நடந்த மாநில அளவிலான வானவில் மன்ற செயல் திட்ட போட்டியில், சிறுமுகை அருகே உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தேர்வு பெற்று, வெளிநாடு சுற்றுப்பயணத்துக்கு தேர்வாகி உள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமுகை அருகே மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அன்பு, மெர்சில்டா, பவின் ஆகியோர் கொண்ட மாணவர் குழுவானது, கட்டுமான தொழில்நுட்பத்தில், கணித கோட்பாடுகள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் உருவாக்கிய கணித மாதிரிகளும், ஆய்வுக் கட்டுரையும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு இடம் பெற்று, மாநில போட்டிக்கு தேர்வானது.
பின்பு அரசின் வழிகாட்டுதல்படி, மாணவர் குழு தலைவரான அன்பு மட்டும், சென்னை அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார்.
அதில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த, 152 பள்ளிகளின் மாணவர்களின் குழு தலைவர்கள், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். நடுவர் குழு சிறந்த, 10 படைப்புகளை தேர்வு செய்தனர். அதில் மூலதுறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்பும் தேர்வானது.
இதன் வாயிலாக மூலத்துறை பள்ளி மாணவர் குழுவில் இடம் பெற்றுள்ள அன்பு, மெர்சில்டா, பர்வின் ஆகிய மூவர், பள்ளி கல்வித்துறையால் அழைத்துச் செல்லப்படும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களின் சாதனையை பாராட்டி, காரமடை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.