/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பேச்சுப் போட்டிக்குஅரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில பேச்சுப் போட்டிக்குஅரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில பேச்சுப் போட்டிக்குஅரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில பேச்சுப் போட்டிக்குஅரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : பிப் 24, 2025 10:53 PM

மேட்டுப்பாளையம்,; மாநில போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வி சாரா செயல்பாடுகளை வளர்க்கும் விதமாக, பள்ளிகளில் இலக்கிய மன்றங்களை நிறுவி, போட்டிகளை நடத்தி வருகின்றன.
கோவை டி.இ.எல்.சி., பள்ளியில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற பேச்சுப்போட்டி நடந்தது. இதில் சிறுமுகை அருகேயுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர் சுதர்சன் பங்கேற்று, 'எதிர்கால வகுப்பறைக் கல்வி' என்ற தலைப்பில் பேசி, முதல் இடத்தைப் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளிலும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாய் செயல்பட்ட கணித ஆசிரியர் திருமுருகனையும், மாணவன் சுதர்சனனையும் பள்ளி தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோன்று கோவையில் நடந்த இலக்கிய மன்ற ஆங்கிலத்தில் கதை சொல்லும் போட்டியில், காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கெய்ட்லின் தெஷாலோனிகா, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.