/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுத் திருவிழாவில் ஒரு பிடி பிடிக்கலாம்!
/
உணவுத் திருவிழாவில் ஒரு பிடி பிடிக்கலாம்!
ADDED : மே 26, 2024 12:45 AM

புரோஸோன், அப்டவுன் கன்பெட்டி மற்றும் 'தினமலர்' சார்பில் நடக்கும், மூன்று நாள் உணவுத் திருவிழா, கடந்த 24ம் தேதி தொடங்கியது. 50 ஸ்டால்களில் சைவம், அசைவம் என அனைத்து வித உணவும் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக, புரோஸோன் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரின்ஸ்டன் கூறியதாவது:
உணவுத் திருவிழாவில், அனைத்து விதமான பிரியாணி, ஐந்து வகை கறிக்குழம்புடன் இட்லி, கொங்கு மண் சட்டி வறுவல், தந்தூரி, பில்லெட், டிரம்மெட், கீமா பால்ஸ், பர்பிக்யூ, தந்தூரி நக்கட்ஸ், ஹோம் மேட் கேக்ஸ், சத்து பானங்கள், வட இந்திய உணவு வகைகள், சாட், ஐஸ்கிரீம் என எண்ணிலடங்கா உணவு வகைகளை ருசிக்கலாம்.
செட்டி நாடு உணவு வகைகளுக்கு, அதிக வரவேற்பு உள்ளது.
'சம்மர் ஹோலிக்' கலை நிகழ்ச்சியில், 3 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கான நடனம், பாட்டு, பேஷன் ஷோ போட்டியின் மெகா இறுதிப் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பொதுமக்கள் உணவு வகைகளை ருசிப்பதோடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம். குடும்பத்தோடு கொண்டாட சிறந்த நிகழ்வாக, 'உணவுத் திருவிழா 2024 சீசன் 3' இருக்கும். ஞாயிறுடன்(இன்று) நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.