/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1:25 விகிதத்தை கடைபிடிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
1:25 விகிதத்தை கடைபிடிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
1:25 விகிதத்தை கடைபிடிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
1:25 விகிதத்தை கடைபிடிக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 12:41 AM

கோவை : தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி, அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மாணவர் நலன் கருதி சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், 2012ம் ஆண்டு முன் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஒரு ஆசிரியருக்கு, 25 மாணவர் என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும், நிரந்தர பணியிடங்களாக மாற்ற வேண்டும், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, ஒரு விடைத்தாளுக்கு ரூ.10 உழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உட்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.