/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 30, 2024 11:48 PM
கோவை:காளப்பட்டி ரோடு, நேரு நகர், சுகுணா பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார்.
அண்ணா பல்கலை கோவை மண்டல மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமாரமங்கலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். சைபர் பாதுகாப்பு, டேட்டா சயின்ஸ் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். முதல்வர் மகுடீஸ்வரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.