/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை
/
நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை
ADDED : ஜூலை 24, 2024 12:18 AM
பெ.நா.பாளையம்;நுண்ணீர் பாசன திட்டத்தால் குறைந்த நீரை கொண்டு அதிக அளவு பயிர்களை விளைவிக்க முடியும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தினர்.
நுண்ணுயிர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தும் சிறந்த தொழில்நுட்ப முறையாகும். குறைந்த நீரை கொண்டு, அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். இதற்கு நுண்ணீர் பாசன திட்டம் வழிவகை செய்கிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் பயன்பாட்டு திறன், மகசூலும் அதிகரிக்கிறது. மேலும், இத்தொழில் நுட்பத்தின் வாயிலாக உரங்களையும், பாசன நீர் வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்த முடியும். இதனால் பாசன நீர் சிக்கனமாக பயன்படுவதோடு, உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு பாசனம், மழை தூவான் பாசனம் உள்ளிட்ட வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தினர்.

